கொள்ளிடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு

கொள்ளிடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு
X

கொள்ளிடம் வெள்ளத்தினால் நீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் காட்டி இழப்பீடு கேட்டனர்.

கொள்ளிடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெற்பயிர்களை கலெக்டரிடம் காட்டி முறையீடு செய்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு லட்சத்து பத்தாயிரம் கன அடி உபரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளிலும் திறந்து விடப்பட்டது. கொள்ளிடத்தில் என்பதாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று லால்குடி தாலுகாவில் கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அரியூர், டி. கள்ளிக்குடி, செங்கரையூர், அன்பில் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டரிடம் காட்டி தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது அவர்களிடம் கலெக்டர் அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!