லால்குடி அருகே அரசு கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் நேரு ஆய்வு

லால்குடி அருகே முதுவத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

லால்குடி தாலுகா முதுவத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு, அதில் மாணவர்களுக்கான தற்காலிக வகுப்பறைகள், கட்டடம் கட்டுவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த கல்லூரிக்கான கட்டடம் கட்டப்படும் வரை, கல்லக்குடி டால்மியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த கல்லூரி தற்காலிக வகுப்பறைகள் செயல்படுவது தொடர்பாக, இந்த பள்ளி வளாகத்தையும், கல்லூரி செயல்பாட்டிற்கான பள்ளி வகுப்பறைகளையும் அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், ஆர்.டி.ஓ. வைத்தியநாதன், ஒன்றிய சேர்மன் ரசியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
ai in future agriculture