லால்குடியில் 24-ஆம் தேதி கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

லால்குடியில் 24-ஆம் தேதி கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X

கலெக்டர் சிவராசு

லால்குடியில் 24-ஆம் தேதி கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கேஸ் நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, திருச்சி டிஆர்ஓ தலைமையில், லால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது, லால்குடி தாசில்தார் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் லால்குடி தாலுகாவுக்குட்பட்ட நுகர்வோர்கள், தங்களது குறைகளை பதிவு செய்து, நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என, கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!