திருச்சி, லால்குடியில் மண்டை ஓட்டுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, லால்குடியில் மண்டை ஓட்டுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

லால்குடியில் மண்டை ஓட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானாவில் மண்டை ஓட்டுடன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டாவில் விவசாய சங்கத்தினர் மண்டை ஓட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக மாநிலம் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. 3 புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும்.

தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள செட்டி ஏரி மற்றும் இரண்டு குமுளிகள்,பாசன வாய்க்கால் அதனை சுற்றியுள்ள பட்டா விளைநிலம் ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்து தடுப்பு வேலி போட்டுள்ளதை அகற்றக் கோரியும், லால்குடி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி விவசாய சங்க நிர்வாகிகள், பிரதிநிகள் என 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்