வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு  நிவாரணம் வழங்க எம்எல்ஏவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

லால்குடி அருகே, வெள்ளத்தில் மூழ்கிய 950 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் எம்எல்ஏவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம், பகுதியில் 950 ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி எம்எல்ஏ., சவுந்தரபாண்டியனிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம், விரகாலூர், திண்ணகுளம், ஆலம்பாடி மேட்டூர் கிராமங்களில் சுமார் 950 ஏக்கர் நன்செய் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கி நெற்பயிர் சேதம் அடைந்தது. ஆலம்பாக்கம் கிராமத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் 4 நம்பர் கிளைவாய்க்கால் பாசன விளைநிலங்கள் சுமார் 250 ஏக்கர், விரகாலூர், திண்ணகுளம் கிராமங்களில் சுமார் 200 ஏக்கர், ஆலம்பாடி மேட்டூர் கிராமத்தின் வடக்கு பகுதியில் 200 ஏக்கர், கிராமத்தின் தெற்கு பகுதியில் 300 ஏக்கர், புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் விரகாலூர் ஏரி பாசன விளை நிலங்களிலும் கூடுதல் மழைநீரால் தேங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை லால்குடி எம்எல்ஏ., சவுந்தரபாண்டியன் மற்றும் ஆர்டிஓ வைத்தியநாதன், தாசில்தார் சித்ரா, வேளாண்துறை உதவி இயக்குநர் மோகன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், . சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அப்போது எம்எல்ஏ கூறுகையில், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள் மூலம் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களின் கணக்கு எடுத்து அரசு மூலம் விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

புள்ளம்பாடி ஒன்றியகுழு தலைவர் ரசியா கோல்டன் ரா ஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன், ஊராட்சி தலைவர்கள் தனலெட்சுமி, அனுப்பிரியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்