திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
X

வேலை வாய்ப்பு முகாம் பைல் படம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) கல்லூரி வளாகத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து துறையைச் சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு, முதுநிலை 2-ம் ஆண்டு பயின்றுவரும் மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம். மாணவ - மாணவிகள் கலந்து கொள்ள வரும்போது, அனைத்து கல்விச் சான்று நகல்கள், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2, சுய விவரம் அடங்கிய நகல் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்