லால்குடியில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

லால்குடியில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X
லால்குடியில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில் திருச்சி  மத்திிய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் அண்ணாவின் 13 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து தி.மு..கவினர் மரியாதை செலுத்தினர் விழாவிற்கு திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் வைரமணி முன்னிலை வைத்தார்.

லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், லால்குடி நகரச் செயலாளர் துரைமாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் துரை கந்தசாமி, பல்லடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், மற்றும் தி.மு.க.வின் ஒன்றிய, நகர, கிளைக் கழகச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர் இதில் பொதுமக்கள் அனைவருக்கும் லால்குடி நகர செயலாளர் சார்பில் உணவு வழங்கப்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்