திருச்சி மாவட்டத்தில் 8 பேருக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ் வினியோகம்

திருச்சி மாவட்டத்தில் 8 பேருக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ் வினியோகம்
X
திருச்சியில் ஆதரவற்ற விதவைகளுக்கு சான்றிதழை கலெக்டர் சிவராசு வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் 8 பேருக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சிவராசு வழங்கினார்.

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதரவற்ற விதவைகளுக்கு பயனாளர் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு இதில் கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள எட்டு ஆதரவற்ற விதவைகளுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.அப்போது வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் உடன் இருந்தார்.

Tags

Next Story