லால்குடி அருகே பாத்ரூமில் வழுக்கி விழுந்த தம்பதியினர் உயிரிழப்பு

லால்குடி அருகே பாத்ரூமில்  வழுக்கி விழுந்த தம்பதியினர் உயிரிழப்பு
X

லால்குடி அருகே பாத்ரூமில் வழுக்கி விழுந்து பலியான தம்பதியினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பாத்ரூமில் வழுக்கி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் பலியானார்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 75). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் வழுக்கி கீழே விழுந்தார். இந்த நிலையில் அருகே நின்று இருந்த அவரது மனைவி அன்னபூரணி (65) ஓடிச்சென்று கணவரை பிடிக்க முயன்ற போது அவரும் தவறி விழுந்துள்ளார். இதில் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மற்றொரு அறையில் இருந்த அவர்களது மகன்கள் ராஜேந்திரன் (50), ராமச்சந்திரன் இருவரும் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தனர். தாயும், தந்தையும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் பெற்றோரை லால்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் வழுக்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!