லால்குடியில் மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
லால்குடி ரவுண்டானா அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லால்குடி ரவுண்டானா அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் மூன்று மற்றும் நான்காம் தேதிகளிலும் அதனை தொடர்ந்து 16மற்றும் 17ம் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்த பேய் மழையால் இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலையே உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை இழந்து மிகவும் பரிதவித்தனர்.
வெள்ளத்தினால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டார். ஆனால் மத்திய அரசு இதுவரை ரூ. 900 கோடி மட்டுமே நிவாரண நிதி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான வெள்ளநிவாரண நிதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. போதுமான நிதி தராத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானா அருகில் இன்று திங்கட் கிழமை மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லால்குடி நகர செயலாளர் கே.குணா தலைமை தாங்கினார். இதில் நகரகுழு மற்றும் வட்ட குழு நிர்வாகிகள் பசுபதி,திவ்யநாதன்,பரமேஸ்வரன்,பன்னீர்,கணேசன், மணிகண்டன்,சங்கர்,ஆண்டனி, ஈஸ்வரன், திலக்,சரவணன், பழனி, ரவி,ரெங்கராஜ்,ரமேஷ், பிரேம் ,முருகன், சப்தரிஷி மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu