லால்குடி அருகே ஸ்ரீகுழுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

லால்குடி அருகே ஸ்ரீகுழுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
X
லால்குடி அருகே ஸ்ரீகுழுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் மிக சிறப்பாக நடந்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த தச்சன்குறிச்சி ஸ்ரீ குளுந்தாளம்மன் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு இரவு பூதவாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கேடயம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், என ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கிடா வெட்டுதல் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று பெரிய தேரில் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேர்முட்டி தெரு, நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, பெருமாள் கோவில் தெருக்களின் வழியாக தேர் நிலையை வந்தடைந்தது. திரளாக கூடியிருந்த பக்தர்களுக்கு ஸ்ரீ குளுந்தாள் அம்மன் அருள்பாலித்தார். இவ்விழாவில் தச்சன்குறிச்சி, புதூர்உத்தமனூர், பல்லபுரம், பெருவளநல்லூர், ரெட்டிமாங்குடி, புறத்தாக்குடி, உள்ளிட்ட ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு முத்துபல்லக்கும் நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி, குருக்கள் விசுவநாதன் மற்றும் கிராம தலைவர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story