திருச்சி அருகே கல்லக்குடியில் சிமெண்ட் ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே கல்லக்குடியில் சிமெண்ட் ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட பீட்டர்.

திருச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சிமெண்ட் ஆலை தொழிலாளி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள திண்ணகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர் (வயது 50). இவர் தனியார் சிமெண்டு ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஜான்சிராணி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மீண்டும் ஜான்சிராணி வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு, ஜன்னல்கள் மூடியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பீட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்