லால்குடி அருகே நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் வெட்டிக்கொலை
Murder Case News -திருச்சி அருகே இன்று அதிகாலை நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் லால்குடி உள்ள நெடுஞ்சாலக்குடிஎன்ற கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது45). இவர் அந்த பகுதியில் கேபிள் டி வி நடத்தும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பெயர் மஞ்சுளா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
நெருஞ்சாலக்குடி கிராமத்தில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் நிர்வாக கமிட்டியில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் மாதவன் பொருளாளர் ஆக இருந்து வந்தார். கோவில் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வந்துள்ளார். இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் பிரச்சினைக்குரிய நிலத்தை அளவீடு செய்தனர். மேலும் இது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை நடைபயிற்சி சென்ற மாதவன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதவன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் மாதவன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தமிழகத்தில் நடைபயிற்சியின் போது கொலை என்பது பல மாவட்டங்களில் ஏற்கனவே நடந்து உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் தா. கிருஷ்ணன், ஆலடி அருணா போன்ற தலைவர்கள் எல்லாம் நடைபயிற்சின்போது தான் அவர்களது அரசியல் எதிரிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதே போல் சென்னையிலும் பல அரசியல் படுகொலைகள் நடைபயிற்சின்போது தான் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் லால்குடி கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் மாதவனும் நடைபயிற்சியின்போது கொலை செய்யப்பட்டு இருப்பதால் அவர் அரசியல் கட்சி எதிலும் உறுப்பினராக இருந்தாரா? அரசியல் ரீதியாக அவருக்கு பகை எதுவும் இருந்ததா? என்ற கோணத்திலும் லால்குடி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சுஜித் குமார் உத்தரவின் படி கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை பிடிப்பதற்கு லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu