ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
X

லால்குடி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

லால்குடி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகிலாண்டபுரம் பகுதியில், கடந்த மே மாதம் 28 ம் தேதி 108 ஆம்புலனஸ் மீது லாரி மோதிய விபத்தில், லால்குடி அப்பாத்துரை கிராமத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேல் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனயில் பிரேத ப‌ரிசோதனை‌க்காக வைக்கப்பட்டு இருந்தது.இறந்த பழனிவேல் குடும்பத்திற்கு அரசு சார்பில் எந்தவித உதவியும் செய்யயாததால், அவரது குடும்பத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!