திருச்சி வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி
X
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை பயிற்சி கல்லூரி (பைல் படம்)
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் வேளாண் இளநிலை மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்ட்து.

திருச்சி அன்பில் தர்லிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்ஆராய்ச்சி குழுமம் நிதியுதவியுடன் தேசிய வேளாண்மை உயர் கல்வித் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 5 நாட்கள் தகவல் தொடர்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்த இந்த முகாமை கல்லூரி முதன்மையர் மாசிலாமணி தொடங்கி வைத்தார். புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முனைவர் ராமசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். வேளாண் வணிக இயக்குநர் சிவக்குமார், அறிவியல் துறை தலைவர் செந்தில்குமார், தாவரவியல் பேராசிரியர் சேதுராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business