கேரள மாநிலத்திற்கு லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

கேரள மாநிலத்திற்கு லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
X
குடிமைப்பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் பறிமுதல் செய்த லாரியையும், டிரைவரையும் ஒப்படைத்தனர்

லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரிலிருந்து டாரஸ் லாரியில் 20 டன் ரேஷன் அரிசியை கடத்தி வருவதாக கொள்ளிடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நம்பர் 1 டோல்கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் 20 ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா, வடபாதி மங்கலம், உச்சிவாடி, தாமரைக்குளம் தெருவைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் பாண்டியன்(51). இவர் லாரியில் ரேஷன் அரிசியை கேரளா மாநிலத்திற்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது. ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பறிமுதல் செய்த லாரியையும்,லாரி டிரைவரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை