மாணவியிடம் பாலியல் வன்மம், இளைஞர் கைது

மாணவியிடம் பாலியல் வன்மம், இளைஞர் கைது
X

திருச்சி மாவட்டத்தில் டிக்டாக்கில் அறிமுகமான இளைஞர் தன்னை பாலியல் வன்மம் செய்ததாக மாணவி அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள காலனித்தெருவைச் சேர்ந்த 15 வயது பெண்கள் இரண்டு பேர். இதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் 15வயது மகனும் திருச்சியிலுள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். மூவரும் கடந்த 6 ம் தேதி காலை 9.30 மணிக்கு அவரவர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் பின்னர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

மூவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் காணாத நிலையில் மூவரது பெற்றோரும் சமயபுரம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் தேடி வந்தனர். அப்போது மாயமான மூவரும் கோயம்புத்தூர் அருகே மேட்டுப் பாளையம் பகுதியிலிருந்து ஊட்டிக்கு செல்ல முயன்ற போது ஆதார் அட்டை அல்லது இ பாஸ் வேண்டுமென பேருந்தில் கேட்டுள்ளனர். ஆவணம் இல்லாததால் மூன்று பேரில் ஒரு பெண் அவரது தாய்க்கு தகவல் கொடுத்துள்ளார்.

மாணவியின் தாய் இது குறித்து சமயபுரம் கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீஸார் மேட்டுப்பாளையம் சென்று மூவரையும் மீட்டு அவர்களது பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். அப்போது மாணவி அவரது தாயிடம் டிக் டாக் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் , மணல்மேல்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் மாரிமுத்து ( 20) என்பவர் நட்பானதாகவும், அவர் அழைத்ததின் பேரில் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், கோயம்புத்தூரில் உள்ள ஒரு இடத்தில் தன்னை வற்புறுத்தி பாலியல் வன்மம் செய்ததாக கூறி அழுதுள்ளார்.இச்சம்பவம் குறித்து மாணவியின் தாய் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இளைஞர் மாரிமுத்துவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags

Next Story