திருச்சியில் தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு : கல்வி அமைச்சர் ஆய்வு

திருச்சியில் தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு : கல்வி அமைச்சர் ஆய்வு
X

திருச்சியில் தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

திருச்சியில் தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி சையத் முர்துசா மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், பன்னிரண்டாம் வகுப்பில் மார்க் குறைவாக பெற்ற மாணவர்கள் அனைத்து பாடங்களுக்கும் தேர்வுக்காக விண்ணப்பிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்வதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அறிவழகன் மற்றும் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் கல்வி அலுவலர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி வருவாய் மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது இடங்களில் இந்த ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது. திருச்சி கல்விமாவட்டத்ததில் 2 இடங்களிலும் மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 1 இடத்திலும் முசிறி கல்வி மாவட்டத்தில் 2 இடங்களிலும் லால்குடி கல்விமாவட்டத்தில் 4 இடங்களிலும் ஆன்லைன் பதிவு இன்று தொடங்கி வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறும்

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 09 Nodal மையங்கள்

திருச்சி கல்வி மாவட்டம் :

01. அரசு சையது முர்துஷா மாதிரி மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, திருச்சி (ஆண்கள் மட்டும்)

02. சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சேவா சங்கம், திருச்சி ( பெண்கள் மட்டும்)

இலால்குடி கல்வி மாவட்டம் :

03. அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் ( பெண்கள் மட்டும்)

04. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் ( ஆண்கள் மட்டும்)

05. அரசு மேல்நிலைப்பள்ளி, இலால்குடி

06. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, துறையூர்

முசிறி கல்வி மாவட்டம் :

07. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி ( பெண்கள் மட்டும்)

08. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி( ஆண்கள் மட்டும்)

மணப்பாறை கல்வி மாவட்டம்:

09. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மணப்பாறை

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!