புள்ளம்பாடி வாய்க்காலில் மாவட்ட கலெக்டர் சிவராசு தண்ணீர் திறந்து விட்டார்

புள்ளம்பாடி வாய்க்காலில் மாவட்ட கலெக்டர் சிவராசு தண்ணீர் திறந்து விட்டார்
X

புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு. 

இன்று மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் சிவராசு திறந்து விட்டார்

மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1ம்தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் படி இன்று மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். 137 நாட்களுக்கு 9 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதே போல திருச்சி புள்ளம்பாடி வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். புள்ளம்பாடிஅதன் படி முக்கொம்பு மேலணை வாத்தலை கிராமத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் மாவட்ட கலெக்டர் சிவராசு தண்ணீர் திறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் லால்குடி சௌந்திரராஜன், காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story