திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று
X
திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 487 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருச்சி மாவட்டத்தில் 4,403 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,098 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்க வில்லை. பலியானவர்களின் எண்ணிக்கை 1,112 ஆக உள்ளது.

தற்போது 3,731 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 487 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 80,255 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products