திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 26 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 26 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 26 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கடந்த 28-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள் உட்பட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து திருச்சி மாநகராட்சியில் நேற்று வரை 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 29 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் போட்டியிட நேற்று வரை 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் இன்று மட்டும் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் இதுவரை மொத்தம் 26 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் போட்டியிட நேற்றுவரை 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்று மட்டும் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் போட்டியிட இதுவரை 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று வரை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 82 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!