/* */

திருச்சி மாவட்டத்தில் கடைசி நாளில் மட்டும் 1026 பேர் வேட்பு மனுத்தாக்கல்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் கடைசி நாளான நேற்று மட்டும் 1026 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் கடைசி நாளில் மட்டும் 1026 பேர் வேட்பு மனுத்தாக்கல்
X

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 28-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 4-ஆம் தேதியான நேற்று மாலை வரை நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் உட்பட இதுவரை மொத்தம் 718 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, துறையூர், முசிறி, துவாக்குடி, லால்குடி ஆகிய 5 நகராட்சிகளில் நேற்று மட்டும் 273 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் இதுவரை மொத்தம் 676 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் போட்டியிட நேற்று மட்டும் 369 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் போட்டியிட இதுவரை 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 2,284 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நடைபெற உள்ள இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் 7-ந்தேதி மாலை உறுதி செய்யப்பட உள்ளது.

Updated On: 4 Feb 2022 11:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க