ஆர்.கே.நகர் - திருமங்கலம் பார்முலா இன்றுவரை செயல்படுகிறது : திருச்சியில் கார்த்தி சிதம்பரம்

ஆர்.கே.நகர் - திருமங்கலம் பார்முலா இன்றுவரை செயல்படுகிறது : திருச்சியில் கார்த்தி சிதம்பரம்
X

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பெங்களூருக்கு செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் தெரிவித்ததாவது,

தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள் தொகுதிப் பங்கீடு என்பதை கருத்தில் கொள்ளாமல் 234 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். அதிமுக இறுதியாக சசிகலாவிடம் தான் செல்லும் அவர் தான் அதிமுகவை வழிநடத்துவார். வாக்காளர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் கொடுப்பதை தடுப்பது என்பது பெரிய சவாலாக இருக்கும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில், வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க பணம் வாங்க மறுத்தால் இது முடிவுக்கு வந்துவிடும். இருந்தாலும் கணித மேதை ராமானுஜத்தின் கணித பார்முலா மறந்து போனாலும் ஆர்.கே.நகர் பார்முலாவும் திருமங்கலம் பார்முலா இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

Tags

Next Story