திருச்சி: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.இந்த தேர்தலை சந்திக்க தேர்தல் ஆணையம் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்குப் பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த வகையில் இன்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் நிலையை அவர் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். ஊழியர்களும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.கே.என்.நேருவுடன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ், பாஸ்கர், அந்தோணி ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா, கதிர்வேல் , பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu