சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்

சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்
X

திருச்சியில் சொத்து தகராறில் தந்தையை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால்(81). இவருக்கு கிருஷ்ணவேணி, கீதா, ஹேமா, பிரேமா என்ற நான்கு மகள்களும், ரவி, பிரபோத சந்திரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் ஐந்து பேர் திருமணமாகி பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக வசிக்கின்றனர்.நந்தகோபால் தனது நான்காவது மகன் பிரபோத சந்திரன் என்பவருடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணமாகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட பிரபோத சந்திரன் திருச்சி தனியார் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று நந்தகோபாலின் பேத்திக்கு சென்னையில் நடைபெறும் பூப்புனித நீராட்டு விழா தொடர்பாக நேற்று இரவு தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்கும் படியும், சொத்தில் பாகம் கேட்டும் தந்தை நந்தகோபாலிடம் தகராறில் ஈடுபட்ட பிரபோத சந்திரன் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில், வீட்டிலிருந்த குழவிக் கல்லை எடுத்து தந்தையின் முன்னந்தலையில் அடித்துள்ளார். இதில் கீழே விழுந்த நந்தகோபால் பின்னந்தலையிலும் அடிபட்டு மரணம் அடைந்துள்ளார்.இதனைக் கண்ட மகன் பிரபோத சந்திரன் தனது தந்தையை தானே அடித்துக் கொலை செய்து விட்டதாக திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி, பிரபோத சந்திரனை கைது செய்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!