திருச்சியில் கொள்ளையர்கள் அட்டகாசம்.

திருச்சியில் கொள்ளையர்கள் அட்டகாசம்.
X
மண்டையை உடைத்து செயின் பணம் பறிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் சிந்துஜா (வயது 27) இவரது மாமியார் சுகந்தி. சிந்துஜாவின் கணவர் சீனிவாசன் நேற்று சென்னை சென்றிருந்த நிலையில், மாமியார் மற்றும் மகள் ஷானவியுடன் சிந்துஜா உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு, மங்கி குல்லா அணிந்தவாறு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் இருவர் சிந்துஜா மற்றும் சுகந்தி அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றபோது இருவரும் தடுக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தாக்கியதில் சிந்துஜாவின் மண்டை உடைந்தது. இதனால் இருவரும் காயமடைந்த நிலையில், கொள்ளையர்கள் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரின் 15 பவுன் தாலி சங்கிலியையும், 14,000 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக உறவினர்களுக்கு சிந்துஜா தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த உறவினர்கள் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு நடந்ததை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்த காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் வேதரத்தினம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் முகமூடி கொள்ளையர்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளது திருச்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!