தமிழக ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு தேர்தல் பொதுக்குழு கூட்டம் திருச்சியில், அதன் செயலாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் 34 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது,
உடனடியாக ராஜஸ்தான் மாநிலத்தை போல ஐந்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும், கல்வி அமைச்சர் ஒரு நாளில் மூன்று விதமான வித்தியாசமான அறிக்கைகளை கொடுக்கிறார் ஒரு தெளிவான அறிக்கை கொடுக்க வேண்டும்,
ஆசிரியர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வேலையில்லா இளைஞர்கள் இத்தனை பேருக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் இருக்கக்கூடிய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து வேண்டும்.
இந்தியாவிலேயே ஆசிரியர்களை நலத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு பழிவாங்கும் போக்கை உடனடியாக கைவிடாவிட்டால் இந்த தேர்தலில் மோடி எதிர்ப்பு மட்டுமல்ல ஆசிரியர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வேலையில்லாத இளைஞர்கள் பங்களிப்போடு எதிர்ப்பு இருக்கும்,
234தொகுதிகளிலும் தேர்தல் எப்படி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இலவச பொருட்கள் என்ற பெயரால் 25விழுக்காடு கூட தரமில்லாத பெருளை எங்களிடம் தந்து விட்டு தலைமை ஆசிரியரிடம் வவுச்சரின் கையெழுத்தை வாங்கிக்கொண்டு எங்கள் மீது பழி போட்டு விடுகிறது, 75 விழுக்காடு பணம் எங்கே செல்கிறது. எங்களை தொடர்ந்து பழி வாங்கினால் கல்வி துறை ஊழல் குறித்து பொதுமக்களையும், பெற்றோரை சந்தித்து இந்த இலவச பொருளில் அடிக்கப்பட்டு இருக்கிற ஊழல் எடுத்துச் சொல்ல தயங்க மாட்டோம் இதனை எச்சரிக்கையாக சொல்கிறோம் எனக் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu