தேர்தலில் தகவல் தொழில் நுட்ப அணியின் பங்களிப்பு முக்கியமானது -கே.என்.நேரு

தேர்தலில் தகவல் தொழில் நுட்ப அணியின் பங்களிப்பு முக்கியமானது -கே.என்.நேரு
X
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு கிழக்கு மண்டலம் உட்பட்ட திருச்சி மத்திய, தெற்கு, வடக்கு உள்ளிட்ட 13 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கே என் நேரு பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தகவல் தொழில் நுட்ப அணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும், கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் மாநகரச் செயலாளர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் சுப்பிரமணி தமிழ் பொன்னி, இசை ஏ கே அருண், டிஜிட்டல் ரமேஷ், இராஜ்குமார், லட்சுமன், திலீபன், சூர்யா உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!