சசிகலா வெளியே வந்தால் எடப்பாடிபழனிச்சாமிக்கு ஆப்பு : உதயநிதி ஸ்டாலின்

சசிகலா வெளியே வந்தால் எடப்பாடிபழனிச்சாமிக்கு  ஆப்பு : உதயநிதி ஸ்டாலின்
X

ஜனவரி 27ம் தேதி சசிகலா வெளியே வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆப்பு காத்திருப்பதாக திருச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விடியலை நோக்கி பிரச்சார பயணம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.அப்போது உதயநிதி பேசியதாவது,எடப்பாடி பழனிசாமி மோடியின் அடிமை.பிஜேபியின் அடிமை,இது அனைவருக்கும் நன்று தெரிந்த ஒன்று. கொரோனாவில் வளர்ந்தது மோடியின் தாடி மட்டுமே - அதை பிடித்து மட்டுமே எடப்பாடி மற்றும் ஒ.பி.எஸ் பிழைத்து வருகிறார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதி வெற்றி கண்டிப்பாக போதாது. எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி பெற வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. அடுத்தவர் காலில் விழுந்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வரும் ஜனவரி 27 ம் தேதி சிறையிலிருந்து சசிகலா வெளியே வருகிறார். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!