மூன்று லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது

மூன்று லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது
X
மும்பையில் இருந்து மூன்று லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மும்பையிலிருந்து விமானம் மூலம் மூன்று லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து அனைத்து மாவட்டத்திற்க்குக்கும் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!