8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது

8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது
X

புகையிலை பொருட்களை பதுக்கியதில் கைது செய்யப்பட்ட   அறிவழகன், உடன் காவல்துறையினர்.

எப்போதும்வென்றான் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே சிவஞானபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எப்போதும் வென்றான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (42) என்பவரது வீட்டருகில் உள்ள ஒரு ஓட்டு சாய்ப்பில் சோதனை செய்தனர். அங்கு 15 சாக்கு மூட்டைகளில் 400 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறிவழகன் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இது தொடர்பாக அறிவழகன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அவருடன் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் உடனிருந்தனர்.



Tags

Next Story