விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி: விருதுநகர் அணி சாம்பியன்

விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி: விருதுநகர் அணி சாம்பியன்
X

கபடி போட்டியில் முதல் பரிசை வென்ற மங்காபுரம் அணி.

விளாத்திகுளம் அருகே நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் விருதுநகர், மங்காபுரம் கபடி அணி முதலிடத்தை பிடித்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பல்லாகுளம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று மாநில அளவிலான பெண்களுக்கான பகலிரவு கபடிப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 26 அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் விருதுநகர் மாவட்டம் மங்காபுரத்தினை சேர்ந்த கபடி அணியும், நெல்லையை சேர்ந்த அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பரபரப்பான நடைபெற்ற இறுதி போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதிக்கொண்டனர். அடுத்தடுத்து இரு அணிகளும் புள்ளிகளை பெற்றன.

இரு அணிகளும் 18-18 என்ற புள்ளி கணக்கில் விளையாடி வந்த நிலையில், போட்டி சமநிலையில் முடிந்து விடும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் மங்காபுரம் அணி இறுதி நிமிடத்தில் ஒரு புள்ளி பெற்று 19 -18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசினை தட்டிச் சென்றது.

இதனைத் தொடர்ந்து இந்த மாபெரும் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினர்களுக்கு விழா கமிட்டியின் சார்பில் பரிசுத்தொகை மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மேலும் பல்லாகுளம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடைபெற்ற இந்த மாநில அளவிலான மகளிருக்கான மாபெரும் கபடி போட்டியானது, கபடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!