தாய் செல்போன் தர மறுத்ததால் மகன் தற்கொலை

தாய் செல்போன் தர மறுத்ததால் மகன் தற்கொலை
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தாய் செல்போன் தர மறுத்ததால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனிமுருகன் ஜோதிமணி தம்பதியருக்கு மதன் (16), பாலகுரு (13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் மதன் 9வது வகுப்பும், பாலகுரு 6 ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர்களின் செல்போன்களை வைத்து விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று மூத்த மகன் மதன் பள்ளிக்கு சென்று விட்டார். இளைய மகன் பாலகுரு வீட்டில் இருந்துள்ளார். தாய் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கிளம்பியுள்ளார். அப்போது பாலகுரு தனது தாயிடம் தானும் உடன் வருவதாக கூறிய நிலையில், தாய் ஜோதிமணி வீட்டிலேயே இருக்கும் படி கூறினாராம். அதற்கு பாலகுரு வீட்டில் இருக்க வேண்டும் என்றால் செல்போனை தரும்படி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிமணி பாலகுருவை தனியாக விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

மீண்டும் ஜோதிமணி வீட்டிற்கு வந்து பார்த்த போது பாலகுரு தூக்கில் தொங்கிய படி உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விளாத்திகுளம் போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!