கனிமொழி கூட்டத்தில் போதை ஆசாமி..!

கனிமொழி (கோப்பு படம்)
Tuty Online News
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி எம்பி-யும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பங்கேற்று பேசினார்.
"ஒன்றிய அரசு தமிழகத்தின் மக்கள் பணத்தை ஜிஎஸ்டி என்ற பெயரில் வசூலித்து கொண்டு சென்று வடமாநிலங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறது. மாறாக மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தமிழகத்திற்கு ஒரு தலைப்பட்சமாக வழங்காமல் நிதி நெருக்கடியை உருவாக்க முயற்சி செய்கிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
Tuty Online News
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் கொள்ளையடித்து இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு நிதியை பயன்படுத்தியது போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்து பாஜக ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனை போன்று, பிரதமர் மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஒன்றிய அரசை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எதிர்த்து வருகிறது. ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய மிரட்டலுக்கு ஒருபோதும் திமுக அரசு அஞ்சுவதில்லை
விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை
டெல்லியில் விவசாயிகளின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்காத ஒன்றிய அரசு தமிழகத்திலும் சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போதும் மக்களின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்கவில்லை.
வெள்ள நிவாரண நிதியையும் வழங்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும், தமிழக மக்கள் பாஜக அரசை ஏற்க மாட்டார்கள்.
பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுகள் விழாது. நாடும் நமதே நாற்பதும் நமதே என்றார் கனிமொழி.
Tuty Online News
அப்போது டவரின் உச்சியில் நின்று ஒரு போதை ஆசாமி கத்திக்கொண்டிருந்தார். கனிமொழி இவ்வாறு பேசிக்கொண்டேயிருந்தபோது, பொதுக்கூட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த, ஸ்பீக்கர் கோபுரத்தில் ஒரு நபர் திடீரென ஏறிவிட்டார்.
அந்த நபர், டவரின் உச்சிக்கும் சென்று, ரகளை செய்ய துவங்கினார். இதைப்பார்த்த கூட்டத்திலிருந்தவர்கள் பதறிப்போய்விட்டனர். இதனை பார்த்த கனிமொழியும், அந்த நபரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். ஆனாலும் அந்த நபர், கோபுரத்தை பிடித்தபடியே தொங்கிக்கொண்டிருந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் என்ன செய்வதென்றே தெரியாமல், அந்த கோபுரத்தின் மீது ஏறினார்கள். போலீசார் மேலே ஏறி வருவதை பார்த்தும்கூட, அந்த நபர் சத்தம் போட்டு கொண்டேயிருந்தார். அதற்கு பிறகு அந்த ஆசாமியை போலீசார் கீழே இறக்கினார்கள்.
இந்த நபர் யாரென்று தெரியவில்லை. போதையில் டவரில் ஏறி அமர்க்களம் செய்த காரணமும் தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ, எதிர்க்கட்சிகள் கையில் கிடைத்துவிட்டது. உடனே, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று விமர்சனங்களை முன்வைத்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu