தயக்கம் இன்றி தடுப்பூசி - கண்காணிப்பு அதிகாரி வேண்டுகோள்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கான கொரேனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் கொரோனா வார்டு அமைப்பது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பொன்ரவியிடம் கேட்டறிந்தார். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள புதிய கட்டிடத்தில் படுக்கை வசதி, ஜெனரேட்டர் வசதி, ஆட்கள் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதற்கு ஏற்பாடுகள் செய்வதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ள முகாமிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தாசில்தார் முருகேசன், டாக்டர் பாவநாசகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், துணை தாசில்தார் பாலசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் குமார் ஜெயந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையில் 53 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 10 சதவீதம் பேர் கூட இன்னும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு இல்லை. எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தயக்கம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய அளவில் படுக்கை வசதி செய்யபட்டுள்ளது. தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu