அடைக்கலாபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கும், மற்றும் வீரபாண்டிய பட்டணம் கருணாலயா மூளைமுடக்குவாதம் மற்றும் மூளைவளர்ச்சி குன்றியவர்கள் உறைவிட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கும், மற்றும் வீரபாண்டிய பட்டணம் கருணாலயா மூளை முடக்கு வாதம் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் உறைவிட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில், தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் வளரும் குழந்தைகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நமது தூத்துக்குடி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கும், மற்றும் வீரபாண்டியபட்டணம் கருணாலயா மூளைமுடக்குவாதம் மற்றும் மூளைவளர்ச்சி குன்றியவர்கள் உறைவிட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மத்திய அரசிடம், தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான கொரோனா தடுப்பூசிகள் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். அதிகப்படியான தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரும் பட்சத்தில் தடுப்பூசிகள் தட்டுபாடின்றி அதிகம் பேருக்கு போட வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ்சிங், தூத்துக்குடி துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) போஸ்கோ ராஜா மற்றும் அலுவலர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், வட்டார மருத்துவ அலுவலர் அஜய், முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி, செங்குலி ரமேஷ், ராமஜெயம், சுதாகர், சுரேஷ் மற்றும் கருணாலயா மூளைமுடக்குவாதம் மற்றும் மூளைவளர்ச்சி குன்றியவர்கள் உறைவிட பள்ளி நிருபர் ராதிகா தனிஷ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu