தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்
புன்னக்காயல் - ஆழ்வார்திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
புன்னக்காயல் - ஆழ்வார்திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் புன்னக்காயல் கிராமப் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் துவக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: திருவைகுண்டம் வட்டம் புன்னக்காயல் மற்றும் சேர்ந்த மங்களம் கிராமங்களுக்கு குறுக்கே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ரூ.46 கோடியே 14 இலட்சம் மதிப்பில் கடைமடை தடுப்பு அணைகள் கட்டப்படுகிறது. இதன் மூலம் கடல் நீர் உள்வாங்காமல் நிரந்தர கட்டுமானமும் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் செறிவூட்டும் வகையில் கிணற்றடி நீர் உயர்ந்திடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதைப்போலவே, ஆழ்வார் திருநகரி மற்றும் ஆழ்வார்தோப்பு கிராமங்களுக்கு இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 14 இலட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகள் துவக்கப்படுகிறது. இதன் மூலம் ஆழ்வார்திருநகரி பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று கிணறுகளுக்கு தேவையான நீர் கிடைக்கும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இத்திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள 1522 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கால்நடை மருத்துவமனைகளில் 1800 கால்நடை மருத்துவர்கள் பணியமர்த்தவதற்காக உத்தரவை முதலமைச்சர் கொடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஹர்சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் எஸ்.ஜெ. ஜெகன், நவீன்குமார், அருணாசலம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி பொறியாளர்கள் பத்மநாபன் ரமேஷ், புன்னக்காயல் ஒன்றியக் குழுத் தலைவர் தினகர், புன்னக்காயல் ஊராட்சித் தலைவர் சோபியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu