/* */

ஆத்தூர்குளம் சீரமைப்பு பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

ஆத்தூர் கஸ்பா கிராமத்தில் உள்ள ஆத்தூர்குளம் சீரமைப்பு பணிகளை தூத்துக்குடி MP கனிமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆத்தூர்குளம் சீரமைப்பு பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்
X

கனிமொழி எம்பி 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கஸ்பா கிராமத்தில் உள்ள ஆத்தூர்குளம் சீரமைப்பு பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் கஸ்பா கிராமத்தில் உள்ள ஆத்தூர்குளம் சீரமைப்பு பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு ஆத்தூர்குளம் புனரமைப்பு பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் இதுகுறித்து கனிமொழி கூறுகையில்:- தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஆத்தூர் குளம் 417 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்திற்கு ஆயக்கட்டு நிலங்கள் 2222 ஏக்கர் உள்ளது. இது தாமிரபரணி ஆற்று பகுதியில் உள்ள முக்கிய குளம் ஆகும். நீண்ட நாட்களாக இது சரியாக தூர்வாறப்படாமல் புதர் மண்டி இருக்கும் சூழல் உள்ளது. கருவேல மரங்களும், புதர்களும் அதிக அளவில் உள்ளது. இக்குளம் சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதிக கொள்ளவு தண்ணீர் தேக்கி வைக்கும் நிலை ஏற்படுத்தப்பட உள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் இதுதொடர்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளார்கள். இப்பகுதி விவசாய பெருமக்களின் கோரிக்கையாக இது உள்ளது.

என்வால்மெண்ட் பவுன்டேசன் ஆப் இந்தியா என்கிற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இன்று குளத்தை சீரமைப்பதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளது. குளம் ஆழப்படுத்துவதுடன் இங்கிருந்து மண் எதுவும் வெளியில் எடுத்து போகாமல் கரை இரண்டு அடுக்காக அகலமாக அமைப்பதுடன் குளத்தின் ஆழப்படுத்தும்போது எடுக்ககூடிய மண் சிறு சிறு தீவுகள் போன்று குளத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டு பறவைகள் மற்றும் உயிரினங்கள் அங்கு இருக்கக்கூடிய வழிவகைகளும் செய்யப்பட்டு பல்லுயிர்களையும் பாதுகாக்கும் குளமாக இது மாற்றி அமைக்கப்பட உள்ளது. இக்குளத்திற்கு நீர் வரத்து கால்வாய்களையும் சுத்தப்படுதும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மேற்பார்வை பொறியாளர் ஞானசேகர், செயற்பொறியாளர் பத்மா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jun 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்