திருச்செந்தூரில் மதுபோதையில் வாலிபர் கொடூரக் கொலை : நண்பர் கைது!

திருச்செந்தூரில் மதுபோதையில் வாலிபர் கொடூரக் கொலை : நண்பர் கைது!
X
திருச்செந்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்து கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்து கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலிசாரின் விசாரணையில் : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் லெட்சமணன் இவரது மகன் சிவமுருகன் (24). இவர் சென்னையில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கை முன்னிட்டு திருச்செந்தூருக்கு வந்துள்ளார். இவர் நண்பர்களுடன் தினமும் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட செல்வார். அதே போல் நேற்று (1.7.21) வாவுநகரில் நண்பர்கள் சண்முகசுந்தர், கார்த்தி உட்பட சிலருடன் விளையாட சென்றுள்ளார்.

மாலையில் இவரது தாயார் தனது மகன் சிவமுருகன் கைபேசியில் அழைத்தபோது, சிவமுருகன் நண்பன் எடுத்து நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளனர். இரவு 10 மணியாகியும் மகனை காணவில்லை. எனவே விளையாட சென்ற நண்பர்களிடம் கேட்டுள்ளார். நாங்கள் விளையாடி விட்டு அப்போதே வந்து விட்டோம் என நண்பர்கள் கூறி உள்ளனர். மேலும் சிவமுருகனின் தம்பி முத்தரசன், இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் ரோந்து சுற்றி வந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சத்துணவு கூடம் அருகே ஒரு வாலிபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சென்று இறந்த கிடந்தவர் யாரென விசாரணை செய்த போது சிவமுருகன் என தெரியவந்தது. மேலும் இறந்த சிவமுருகனுடன் விளையாட சென்ற வாவு நகரை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சண்முகசுந்தரத்தை பிடித்து விசாரித்ததில் பரபரப்பு தகவல் வெளியானது.

கொலையான சிவமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது சங்கர் மகன் சண்முக சுந்தரம் (26). என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் அங்கு கிடந்த கட்டையை எடுத்து சிவமுருகனை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த சிவமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவமுருகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த சண்முக சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
அசைக்க முடியாத அடையாளம்..!திருச்செங்கோட்டில் 60-அடி திமுக கொடிக்கம்பம்..!