திருச்செந்தூர் அருகே 15 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் : 4 பேர் கைது
திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமை காவலர்கள் ராஜ்குமார், இசக்கியப்பன் மற்றும் சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று அடைக்காலபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 கார்களை சோதனை செய்ததில், அந்த வாகனங்களில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முஸ்தாபா மகன் ஆசீர் (22), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஹாய்சன் மகன் ஹஸ்வின் (24), கன்னூர் தலைசேரி பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் மகன் உம்னாஷ் (29) மற்றும் ஆந்திரா மாநிலம் விசாகபட்டிணம் கொலுகண்டா பகுதியை சேர்ந்த தாதபாபு மகன் சாய்கணேஷ் (23) என தெரியவந்தது, அவர்கள் மேற்படி கார்களில் 4 மூட்டைகளில் சட்டவிரோதமாக 110 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்கள் கடத்தி வந்த சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu