மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி கடன் உதவி -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி கடன் உதவி -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
X
திருச்செந்தூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி கடன் உதவி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருச்செந்தூரில் 129 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான கடன் மற்றும் 22 பேருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய முதலிட்டு நிதி மற்றும் வங்கி கிளைகள் வாரியாக 129 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான கடன் உதவிகளையும், சமுதாய முதலிட்டு நிதியின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.4.72 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், தலைமையில் இன்று (07.08.2021) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா


,ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100 நபர்களுக்கு 18 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மேலும் வருவாய் துறையின் மூலம் முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனு அளித்த பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகியோர்களின் உதவித்தொகைக்கான உத்தரவினையும், 43 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி,மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் பிச்சை, திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், வட்டார வளர்ச்சி அலுவலர் அலமேலு, கனரா பேங்க் உதவி பொது மேலாளர் சின.எஸ்.தேவ், முக்கிய பிரமுகர்கள், செங்குளி ரமேஷ், ஜெகன், ராமஜெயம், வால்சுடலை, ஜெபமாலை மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா