குலசேகரன்பட்டினத்தில் உயிரிழந்த யானை பவானி, நல்லடக்கம் செய்யப்பட்டது
யானை பவானியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
குலசேகரன்பட்டிடனத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பெண் யானை பவானி நோய் பாதிப்பால் நேற்று உயிரிழந்தை தொடர்ந்து, கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் தனியாருக்கு சொந்தமான பெண் யானை பவானி(45), இந்த யானை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா உள்ளிட்ட உடன்குடி பகுதியில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காலில் புண் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியிலிருந்து கால்நடை மருத்துவர்கள் யானை பவானியின் காலில் ஏற்பட்ட புண்ணை குணப்படுத்துவதற்காக அந்த காலை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யானை பவானி நிற்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை யானை பவானி பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை குலசேகரப்பட்டினம் கடற்கரையில் உள்ள செய்யது சிராஜுதீன் பள்ளிவாசல் வளாகத்தில் வனத்துறையினர் முன்னிலையில் கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் இந்த யானைக்கு தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu