தூத்துக்குடி: நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு

தூத்துக்குடி: நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி

நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. வெள்ளத்தால் மாவட்டத்தின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன. சாலைகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்து உள்ளது. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story