உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை

உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை
X
உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் தாலுகா காவல்நிலைய முன்னாள் தனிப்பிரிவு காவலர் செல்வமுருகனின் மனைவி அருணா (வயது-38), இவர் கணவர் தனிப்பிரிவு காவலர் செல்வமுருகன் இறந்த பிறகு உடன்குடி - பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியில் வசித்து வந்த நிலையில், இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த குலசேகரப்பட்டினம் போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் தனிப்பிரிவு காவலர் செல்வமுருகன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட அதே நாளில் ஓராண்டுக்குப் பிறகு அவரது மனைவியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்