திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டுத் திருவிழா
கற்குவேல் அய்யனார் கோயிலில் நடைபெற்ற கள்ளர் வெட்டுத் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணயிசுவாமி கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் போன்று திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலும் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது ஆகும்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் புகழ்பெற்றது. மேலும் இந்த கள்ளர் வெட்டுத்விருவிழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித மணலை எடுத்துச் செல்வார்கள்.
அதன்டி, இந்த ஆண்டுக்கான கள்ளர்வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 17 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் தினமும் அய்யனாா் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான கள்ளர் வெட்டு நிகழ்வு கோயில் பின்புறமுள்ள தேரிப் பகுதியில் நேற்று நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பொதுமக்களின் கடைகளில் திருடி தொல்லை கொடுத்து வரும் கள்ளர்களை தண்டிக்கும் விதமாக அய்யனார் அருள் வந்து இளநீரை கள்ளராக பாவித்து இளநீர் வெட்டப்பட்டது. அந்த இளநீர் மண்ணில் பட்ட மணலை பக்தர்கள் புனித மணலாக கருதி பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து செல்வது வழக்கம்.. அந்த மணலை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என கருதி எடுத்துச் செல்வார்கள்.
மேலும், புனித மண்ணை எடுத்து பக்தர்கள் தங்களது நெற்றியில் பூசிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu