அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
X

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. இதையொட்டி காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலில் வலம் வருதலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனாரை வழிபட்டனர்.

தனைத்தொடர்ந்து விழாவின் 6ம் நாளான மார்ச் 14ம் தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 10ம் நாளான 18ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு ஹோமமும், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமாரசாமி, ஆத்திக்கண், அகோபால், உதயகுமார், தினேஷ், செந்தில், நாராயணராம், கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Tags

Next Story
the future of ai in healthcare