படகுகள் வந்து செல்ல முகத்துவாரப் பணி: மணப்பாட்டில் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு

படகுகள் வந்து செல்ல முகத்துவாரப் பணி:  மணப்பாட்டில் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
X

மணப்பாடு கிராமத்தில் தற்காலிகமாக படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைப்பதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.

மணப்பாட்டில் தற்காலிகமாக படகுகள் கடலுக்குள் வந்து செல்ல முகத்துவாரம் அமைக்கும் பணி : ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு கிராமத்தில் தற்காலிகமாக படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைப்பதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், இன்று (04.08.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: மணப்பாடு கிராமத்தில் விரைவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும். மீனவர் நலன் - மீன்வளத்துறை அமைச்சர் என்னை போனில் தொடர்பு கொண்டு மணப்பாடு கிராமத்திற்கு சென்று அங்குள்ள பிரச்சனைகளை சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் தங்கள் கிராமத்திற்கு தற்சமயம் தற்காலிகமாக படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக மணல் திட்டினை அகற்றி முகத்துவாரம் அமைப்பதற்கான பணி விரைவில் மீன்வளத்துறையின் மூலம் பணிகள் துவக்குவதற்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்காலிகமாக படகுகள் மற்றும் நாட்டு படகு மீனவர்களுக்கும் படகுகள் வந்து செல்வதற்கும் மற்றும் நிறுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும். ஓரிரு நாட்களில் மணல் திட்டினை சரிசெய்து அலை குறைவாக உள்ள பகுதியில் மாற்று ஏற்பாடு செய்து தற்காலிகமாக முகத்துவாரம் அமைக்கப்படும்.

மேலும் மணப்பாட்டில் மீன்களை பதப்படுத்தப்படும் அறை இல்லாததால் அதிக அளவு மீன் உற்பத்தியாகும் பொழுது அதன் விலை குறைவாக இருப்பதால் மீனவர்களுக்கு சரியான விலைக்கு மீன்களை விற்க முடியவில்லை. எனவே மீன்களை பதப்படுத்தப்படும் அறை ஒன்று அமைத்தால் மீன்களின் விலை அதிகரிக்கும்பொழுது அதனை பதப்படுத்தி வைத்து மீன்களின் விலை ஏறும்பொழுது அதை விற்கும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவாக படகுகள் மற்றும் நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு தூண்டில் வளைவு அமைத்து இதற்கான நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், மீன்வளத்துறை செயற்பொறியாளர் கங்காதரன், உதவி இயக்குநர் விஜயராகவன், பஞ்சாயத்து தலைவர் கிரேன்சிட்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செழியன், நாகராஜன், ஊர் தலைவர் பயாஸ், முக்கிய பிரமுகர்கள் ஸ்ரீதர்ரெட்டிரிகோ, ஸ்ரீதீபன், ஜெபமாலை, ஸ்ரீதீப், எஸ்.ஜே.கபாஸ், லாபாரி, லெனின் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil