திருச்செந்தூர் சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீதனப் பொருட்கள்

திருச்செந்தூர் சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீதனப் பொருட்கள்
X

திருச்செந்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீதனைப் பொருட்களை அமைச்சர் அனிதா ராாதகிருஷ்ணன் வழங்கினார்.

திருச்செந்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவை, தமிழக மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளை பாதுகாக்கின்ற வகையிலும், குழந்தை பிறந்து அதற்கு பிறகும் அந்த குழந்தைகளை பாதுகாக்கின்ற வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அது தாயாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி அத்தனையும் இன்றைக்கு சுகாதாரமான நிலையிலே இருக்க வேண்டும் என்று சொல்லி எந்தவித குறையுமில்லாமல் அதிக ஆற்றலுள்ள குழந்தையாக உருவாகும் என்ற நிலையிலே நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.

பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என்று அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக மகளிர்கள் நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் மகளிர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம், பெண்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்கள் கல்வியில் உயர வேண்டும். 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு நின்றுவிடக்கூடாது. அவர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும், படிக்க வேண்டும். படித்தவர்கள் பண்புள்ளவர்களாக மாற வேண்டும் என்றால் ஒரு சமுதாயம் முன்னேறும் என்ற வகையிலே 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய அற்புதமான திட்டமான புதுமைப்பெண் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்களாக வளைகாப்பிற்கு வந்திருக்கின்ற அனைத்து தாய்மார்களும் எல்லா வகையிலும் ஆரோக்கியம் பெற்று, தங்களுடைய குழந்தைகளையும் ஆரோக்கியமாக பெறுகின்ற நிலையினை நீங்கள் பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

தொடர்ந்து 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களான தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், இனிப்பு மற்றும் மதியம் ஐந்து வகை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், திட்ட அலுவலர் சரஸ்வதி, திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story