ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவு : அனிதா ராதாகிருஷ்ணன்

ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவு : அனிதா ராதாகிருஷ்ணன்
X

திமுக தலைவர் ஸ்டாலின் தான் தமிழக முதல்வராக வர வேண்டும் என்பது மக்களின் முடிவு என திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரத்தின் போது பேசினார்.

சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூா் தொகுதியில் போட்டியிடும் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பள்ளிப்பத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினாா். தொடா்ந்து, நாதன்கிணறு, எழும்படிவட்டம், பூச்சிக்காடு, சுயம்புலிங்கபுரம், வடக்கு நல்லூா், மூலக்கரை, கந்தன்குடியிருப்பு, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்தாா். மாலையில், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் துணிவுமிக்க ஒரே தலைவரான மு.க.ஸ்டாலின் தான் தமிழக முதல்வராக வரவேண்டும் என்பது மக்களின் முடிவு. கருத்துக்கணிப்புகள்கூட அதைத்தான் பிரதிபலிக்கின்றன. 234 தொகுதியிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். மாணவா்கள், ஏழை மக்கள், மகளிா் சுயஉதவி குழுக்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு