உடன்குடி,-தருவைகுளம் நிரம்புவதற்கு 8 கிலோ மீட்டர் தூரம் கால்வாயை சீரமைக்க வேண்டும்

உடன்குடி, தருவைகுளம் நிரம்புவதற்கு 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உடன்குடி அனல் மின் நிலைய அதிகாரிக்கு, கருமேனி ஆறு கழிமுக பகுதி விவசாயிகள் நல கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் அருகேயுள்ள எல்லப்ப நாயக்கன் குளத்தின் மறுகாலில் இருந்து வெளியேறும் உபரிநீர், அனல்மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க கால்வாய் கரையில் மணல் ஒப்பந்தகாரர்களால் சுமார் அரை பர்லாங் தூரம் 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்திலும், அனல் மின் நிலைய மதிற்சுவர் எதிர்பக்க உபரிநீர் கால்வாய் கரை 6 கி.மீ தூரத்திற்கு மிகவும் சேதமடைந்திருப்பாதாலும் குலசை தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்து.
இதன்விளைவாக உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயத்தோட்டங்கள் மற்றும் பொது மக்கள்ள்குடிநீர் ஆகியன பாதிப்படையும் நிலை உருவாகி உள்ளது. இந்தாண்டு மணிமுத்தாறு, பாபநாச மலைகளில் சரியான மழையில்லை. ஆகையினால் பாபநாச அணைநீர் மட்டம் 97 அடிதான் நிரம்பியிருக்கிறது. ஏல்லப்பநாயக்கன் குளத்து மறுகால்நீர் எளிதில் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
எனவே எல்லப்ப நாயக்கன் குளம் மறுகாலில் இருந்து குலசை தருவைகுளம் வரை உபரிநீர் கால்வாயின் அனல்மின்நிலைய மதிற்சுவர் எதிர் கரையை 8 கி.மீ தூரத்திற்கு சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் சரிசெயய்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu